ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய நீதியில் வழக்கறிஞர்கள் கையெழுத்து.

13.3.18அனைத்துலக தமிழர் பேரவை சார்பில் ஈழத் தமிழர்களுக்கு
நீதி கோரி உலகளாவிய  வழக்கறிஞர்களிடம் மாபெரும் கையெழுத்து  இயக்கம் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.
சென்னையில் கடந்த வாரம்  இடம்பெற்ற கையெழுத்து இயக்கத்தில்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்  வழக்கறிஞருமான தொல்.திருமாவளவ‌ன் இதற்கான விண்ணப்பத்தில் ஒப்பமிட்டார்  அவருடன் 500க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் பெரும் திரளாக ஒன்றிணைந்து  கையெழுத்திட்டனர்.

கையெழுத்து இயக்கம் தொடர்பில் திருமாவளவன் கருத்து  தெருவித்தபோது இலங்கை அரசாங்கத்தால் தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகத்தின் முன்  நீதிகிடைக்க வேண்டும் என்று கருதுகிறோம். இந்த நோக்கத்துக்காக உலகெங்கும் மனித நேயத்துடன்  களமாடிக்கொண்டிருக்கின்ற  அனைத்து  வழக்கறிஞர்களும் இக்கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று  பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் சார்பில் வேண்டுகிறேன்
நான் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பதையும் தாண்டி ஒரு வழக்கறிஞராக உங்கள் அனைவரிடமும்  உரிமையுடன் இந்த கோரிக்கை விடுக்கின்றேன் என்றார் திருமாவளவன்.


இந்நிகழ்வில் அனைத்துலகத் தமிழர்  பேரவையின் செயற்பாட்டாளர்களில்  ஒருவரான குரு அவர்கள் ஜெனிவாவில் இருந்து இணைய வழிக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
0 கருத்துக்கள் :