ஆஸ்திரியாவில் கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு : 2 பேர் பலி

23.5.16

ஆஸ்ட்ரியாவில் திறந்த வெளி கச்சேரிக்கு வந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரைக் கொன்று, 11 பேரை காயப்படுத்திய ஒருவர் பிறகு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டான் என்று போலிசார் கூறுகின்றனர்.

அந்த கச்சேரி லெய்க்டென்ஸ்டெயின் எல்லையில் உள்ள நென்சிங் நகரில் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.
இச்சம்பவம் நடைப்பெறுவதற்கு முன்னதாக கார் நிறுத்தத்தில் பெண் ஒருவரிடம் அந்த மர்ம நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக நென்சிங் மேயர் கூறுகையில் இந்தப் பகுதியைச் சேர்ந்த அந்நபர் முப்பதிலிருந்து நாற்பது முறை துப்பாக்கியால் சுட்டார் என தெரிவித்தார்.
மேலும் அவர் அப்பகுதி மக்கள் பயத்தில் தப்பித்துச் செல்வதற்கு சுற்றுப்பகுதியில் உள்ள காடுகளுக்குள் நுழைந்தனர் எனவும் தெரிவித்தார்.
அங்குள்ள மோட்டர்சைக்கிள் க்ளப் ஒன்று ஏற்பாடு செய்திருந்த கச்சேரி நிகழ்ச்சியில் காலை சுமார் மூன்று மணியளவில் இந்த துப்பாக்கிச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது

0 கருத்துக்கள் :