சிலுவையில் அறைந்து மரண தண்டனை நிறைவேற்றம்

30.4.16

ஐ.எஸ். தீவிரவாதிகள் உளவு பார்த்த குற்றச்சாட்டில் தம்மால் கைது செய்யப்பட்ட இருவருக்கு சிலுவையில் அறைந்த பின்னர் தலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன.

சிரிய ரக்கா நகரில் படமாக்கப்பட்டு' உளவாளிகளை அறுவடை செய்தல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வில்லாயத் அர் ரக்கா (ரக்கா மாகாணம்) என்ற பெயரிலான ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஐ.எஸ். தீவிரவாதியொருவர் செம்மஞ்சள் ஆடை அணிந்த நிலையில் காணப்பட்ட குறிப்பிட்ட இரு உளவாளிகளுக்கும் அருகில் நின்றவாறு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் குறித்து அறிக்கையொன்றை வாசிப்பதையும் தொடர்ந்து அந்த இருவரும் சிலுவைக் கட்டமைப்புகளில் கட்டப்பட்டிருப்பதையும் அவர்கள் இருவரும் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவதையும் தீவிரவாதிகளால் வெளியிடப்பட்ட பிந்திய புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.

கண்கள் கட்டப்படடிருந்த அந்த உளவாளிகளின் ஆடையில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் எதிரிகளுக்காக அவர்களை உளவு பார்க்கும் ஏனையவர்களுக்கும் இதே கதியே நேரிடும் என எச்சரிக்கும் அரேபிய மொழியிலான குறிப்புக்கள் பொறிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :