ரவிராஜ் கொலையில் பிள்ளையானின் ஆயுதம்

3.3.16

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வழங்கிய ஆயுதத்தைப் பயன்படுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்டார் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிராஜ் கொலை குறித்த வழக்கு விசாரணைகளின் போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேரன் எனப்படும் ஒருவருக்கு ஆயுதம் வழங்கப்பட்டதாகவும் அவர் மற்றுமொரு நபரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் சாட்சியாளர்களில் ஒருவரான அன்ஜோ ரோய் என்பவரினால் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :