ஹெரோய்ன் விழுங்கிய நிலையில் பாகிஸ்தான் பெண் கைது!

14.3.16

ஹெரோய்ன் போதைபொருளை சிறிய வில்லைகளாக மாற்றி விழுங்கிய நிலையில் நாட்டுக்குள் கொண்டு வந்த பாகிஸ்தான் நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்தப் பெண் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டதாக விமான நிலைய பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் இன்று தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர், அவரின் வயிற்றிலிருந்து 46 ஹெரோய்ன் வில்லைகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த பெண்ணின் உடம்பில் ஹெரோய்ன் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

0 கருத்துக்கள் :