எப்போ போட்டீங்க? வயது வந்தவர்களுக்கு மட்டுமே : கூறுகின்றார் ஆர் ஜே பாலாஜி (வீடியோ இணைப்பு)

27.3.16

வாக்குரிமையை  வலியுறுத்தி நடிகர் ஆர் ஜே பாலாஜி வெளியிட்டிருக்கும் வீடியோ, இணையத்தில் தற்போது பிரசித்திபெற்று  வருகிறது.
சமூகப் பொறுப்புடன் அவ்வப்போது வீடியோக்களை வெளியிடும் ஆர் ஜே பாலாஜி, தற்போது தேர்தல் விளிர்ப்புனர்வை ஏற்படுத்தும்  ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்
எப்போ போட்டீங்க? என்பது இந்த வீடியோவின் தலைப்பு. இந்த வீடியோவை 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு கீழே உள்ளவர்கள் போய் டோரா புஜ்ஜி விளையாடுங்க என்ற டைட்டில் கார்டுடன் தொடங்கும் வீடியோவில், ஓட்டுப் போடுவதின் அவசியத்தை பாலாஜி வலியுறுத்தியிருக்கிறார்.
18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இந்த வீடியோவில், ஓட்டுப் போடுவதின் அத்தியாவசியம் குறித்து பாலாஜி விளக்கியிருக்கிறார்.
வழக்கம் போல இணையத்தைக் கலக்கி வரும் இந்த வீடியோ, பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

0 கருத்துக்கள் :