விடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்

18.3.16

மட்­டக்­க­ளப்பு தர­வையில் அமைக்­கப்­பட்­டி­ருந்த தமி­ழி­னத்தின் விடு­த­லைக்­காக போரா­டிய எமது உற­வு­களின் சமா­திகள் அழிக்­கப்­பட்டு அந்த பகு­தி­களில் பெரும்­பான்மை இனத்­தவர் குடி­யேற்­றப்­ப­டு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடாளு­மன்ற உறுப்­பினர் சீனித்­தம்பி யோகேஸ்­வரன் தெரி­வித்தார்.

வாகரை, இறா­லோடை வள்­ளுவர் வித்­தி­யா­லய வரு­டாந்த இல்ல விளை­யாட்டுப் போட்­டியில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இந்த பிர­தே­ச மக்­களைப் பொறுத்­த­வரை கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளிக்­காது முஸ்லிம் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளித்­துள்­ளதை நான் வாக்கு எண்ணும் நிலை­யத்தில் நேர­டி­யாகக் கண்டேன்.

 இந்த சம்­ப­வ­மா­னது தமிழ் மக்­களை மிகவும் பாதித் ­தி­ருந்­தது. எமது இளை­ஞர்­களின் போராட் டத்தை நேர­டி­யாக பார்த்த இந்த பிர­தேச மக்கள் அவர்­களின் தியா­கங்­களை மறந்து அவர்­களை கொச்­சைப்­ப­டுத்தும் வகையில் மாற்றுக் கட்­சிக்கு வாக்­க­ளித்­துள்­ளீர்கள். தமி­ழர்­க­ளுடன் இணைந்து இஸ்­லா­மிய மாண­வர்கள் கல்வி கற்­கக்­கூ­டாது என இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு தனி­யா­ன­தொரு கல்வி வல­யத்தை உரு­வாக்கி இன­வா­தத்தை தூண்­டிய பிர­தி­ய­மைச்சர் அமீர் அலிக்கு இந்த பிர­தேச மக்கள் வாக்­க­ளித்­துள்­ளீர்கள். தமிழ், முஸ்லிம் மாண­வர்கள் ஏன் இணைந்து படிக்க முடி­யாது? அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட சமுர்த்திக் கொடுப்­ப­னவை நேரில் சென்று வழங்­கினார் என்­ப­தற்­காக தமிழ் இனத்தின் ஒரே­யொரு உரி­மை­யாக இருக்­கின்ற வாக்­கு­களை இஸ்­லா­மிய மக­னுக்கு வழங்கி எமது இனத்தை கொச்­சைப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றீர்கள்.

உங்­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிடிக்­க­வில்லை என்றால் ஏனைய கட்­சி­களில் போட்­டி­யிட்ட தமி­ழ­னுக்கு வாக்­க­ளித்­தி­ருக்­கலாம். தமிழ் மக்கள் தமது சொந்த நிலத்தில் நிம்­ம­தி­யாக வாழ வேண்டும் என்­ப­தற்­காக நாங்கள் இன்­று­வரை போராடிக் கொண்­டி­ருக்­கிறோம். இந்த பிர­தேச மக்கள் வாக்­க­ளிக்­க­வில்லை என்­ப­தற்­காக நாங்கள் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களில் புறந்­தள்­ள­மாட்டோம். சகல அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களும் இந்த பிர­தே­சங்­களில் நடை­பெறும் அதில் பார­பட்சம் காட்­ட­மாட்டோம். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கிரான் பிர­தேச செய­லாளர் பிரிவில் குடும்­பி­மலை பகு­தியில் திட்­ட­மிட்­ட­மு­றையில் சிங்­க­ள­வர்கள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளார்கள். பெரும்­பான்மை இனத்­தவர் எங்­க­ளது பிர­தே­சத்தை சுவீ­க­ரிப்­ப­தற்­காக எமது இனத்தின் விடு­த­லைக்­காக, எமது மக்­க­ளுக்கு நியா­ய­பூர்­வ­மான சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக தங்­களைத் தியாகம் செய்து போராடி உயிர்­நீத்த எமது உற­வு­களை அடக்கம் செய்த தரவை மயா­னத்­தி­லி­ருந்த கட்­டடங்­களை இடித்து சிங்­கள மக்­க­ளுக்கு காணி பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்­கை­யெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இதனை நாங்கள் ஒருபோதும் அனு­ம­திக்க மாட்டோம்.

இறந்த உற­வு­களின் கட்­டடங்­களை கூட பாதுகாக்க முடி­யா­த­வர்­க­ளாக எங்­களை இந்த அர­சாங்கம் உரு­வாக்­கு­கி­றது. நல்­லாட்சி எனக்கூறும் அர­சாங்கம் அதர்­ம­மான செயல்­களில் ஈடு­ப­டக்­கூ­டாது. எமது உற­வுகள் அடக்கம் செய்­யப்­பட்ட பகுதிகள் பாது­காக்­கப்­பட வேண்டும். பண்­டைய மன்னன் துட்­ட­கை­முனு தன்­னுடன் போரிட்டு வீரச்­சா­வ­டைந்த தமிழ் மன்னன் எல்­லா­ளனின் வீரத்தை உணர்ந்து அவரை அநு­ரா­த­பு­ரத்தில் அடக்கம் செய்த இடத்தை பாது­காத்து வணக்கம் செலுத்­து­மாறு உத்தரவிட்டுள்ளான்.

இந்த அரசாங்கம் தமிழினத்தின் விடுத லைக்காக போராடிய எமது உறவுகளின் சடலங்கள் விதைக்கப்பட்ட இடங்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் சமாதிக்க கட்டடங்கள் தொடர்ந்து இருப்பதற்கும் நடவடிக்கையெடுக்க வேண்டும். அதுதான் நல்லாட்சியின் மகத்துவம். சமாதிக் கட்டடங்களை இடித்து ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களின் மனங்களை துன்புறுத்தாதீர்கள் என்றார்.

0 கருத்துக்கள் :