ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி இன்று காலை திடீரென வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இருதய சிகிச்சைபிரிவில் பரிசோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயம் தொடர்பில் சிறைத்துறை மற்றும் மருத்துவ வட்டாரத்தில் வினவியபோது, அவர் நரம்பு மற்றும் இதயம் சம்மந்தமான சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி, சிகிச்சை அளிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டனர். திடீரென நளினி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டமை சிறைத்துறை மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
|
0 கருத்துக்கள் :
கருத்துரையிடுக