தெமட்டக்கொட துப்பாக்கி சூடு: சிசிடிவி காணொளி வெளியானது

3.3.16

தெமட்­டக்­கொடை, சமந்தா திரை­ய­ரங்கு பகுதிக்கருகில் வைத்து சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.
சிறைச்சாலை பஸ் ஒன்றில் கொண்டுச் செல்லப்பட்ட பாதாள உலகத் தலை­வர்­களில் ஒரு­வ­ராக கரு­தப்­படும் தெமட்­ட­க்கொட சமிந்த மீது தெமட்­டக்­கொடை, சமந்தா திரை­ய­ரங்கு அருகே நேற்று துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

பாரதலக் ஷ்மன் பிரே­மச்­சந்­திர உள்­ளிட்ட நால்­வரின் படு­கொலை விவ­காரம் தொடர்பில் நேற்று கொழும்பு மேல் நீதி­மன்றில் இடம்­பெற்ற வழக்கு விசா­ர­ணையின் பின்னர், அவ்­வ­ழக்கின் சந்­தேக நபர்­களை வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே, சிறைச்­சாலை பஸ் வண்டி மீது நேற்று பிற்­பகல் 3.40 மணி­ய­வில் இச் சம்பவம் இடம்பெற்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நுவான் வேதிசிங்கவின் தலமையில் இன்று முழுவதும் கொழும்பு நகரில் உள்ள பல சீ.சி.டி.வி. கண்காணிப்பு கமராக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன் போது துப்பாக்கிச் சூட்டினை மேற்கொள்ள, சந்தேக நபர்கள் பயணித்ததாக நம்பப்படும் கறுப்பு நிற ஹைபிரிட் ரக காரின் பயணப் பாதை, குறித்த சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமரா பதிவுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தாக்குதல் நடத்த சில வினாடிகளுக்கு முன்னர் இக்கார் பயணிப்பது குறித்த பதிவுகளே பெறப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மேலதிக பதிவுகள் பெறப்பட்டதாகவும் எனினும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் காட்சிகள் எதுவும் சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துக்கள் :