தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பிறந்த இடம் தெரியுமா?

14.2.16

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா நுவரெலியா போதனா வைத்தியசாலையில் பிறந்ததாக தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
1989ஆம் ஆண்டு துவாரகா நுவரெலிய வைத்தியசாலையில் பிறந்தபோது அவரை பராமரித்ததாக கூறப்படும் சிங்கள மருத்துவ மாது ஒருவர் இந்த கதையை கூறியுள்ளார்.
ஜேவியின் கிளர்ச்சி இடம்பெற்ற காலக்கட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குறித்த மருத்துவமாது பெண் கருத்துரைக்கையில்,
ஒரு வியாழக்கிழமையில் வைத்தியசாலையில் பிள்ளைப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட மதிவதனி என்ற பெண், சனிக்கிழமையன்று பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அவர் தமது முதல் பிள்ளை ஆண்பிள்ளை என்று கூறினார்.
மதிவதனி வைத்தியசாலையில் பிள்ளைப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டபோதும் யாரும் அவரை வந்து பார்க்கவில்லை. இந்தநிலையில் அவர் வைத்தியசாலையில் வழங்கப்பட்ட உணவையே உண்டு வந்தார்.
இதன் பின்னர் அவரை பார்ப்பதற்காக கண்ணாடி அணிந்த ஒருவர் வந்து சென்றார். அவர், பார்ப்பதற்கு நுவரெலியாவை சேர்ந்தவர் போன்று காட்சியளிக்கவில்லை. யாருடனும் அவர் அதிகமாக பேசுவதில்லை. வெறுமனே புன்னகையை மட்டும் காட்டுவார் என்று மருத்துவ மாது தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பெண் குழந்தை கிடைத்த பின்னர் குறித்த பெண்ணான மதிவதனியை நுவரெலியா வைத்தியசாலையில் இருந்து வன்னியின் வைத்தியசாலைக்கு இடமாற்றியதாக மருத்துவ மாது
 குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை நடந்த போதும் தமக்கு குறித்த பெண் யார் என்பது தெரியவில்லை. எனினும் இவையாவும் இடம்பெற்ற சில நாட்களின் பின்னர் வைத்தியசாலைக்கு வந்த புலனாய்வுப் பிரிவினர் கடந்த இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் தங்கி குழந்தைகளை பெற்றெடுத்தவர்களின் பட்டியலை கேட்டபோதே உண்மை தெரியவந்தது.
இதன்போது அவர்கள் காட்டிய புகைப்படத்தை கொண்டு குறித்த பெண்ணான மதிவதனியை பார்க்க வந்தவர் பிரபாகரன் என்று நினைக்கத்தோன்றுகிறது என்று மருத்துவ மாது
 குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் நுவரெலியாவில் இருந்த போது தமிழர்கள் மத்தியில் இந்த கதையை சொல்வதற்கு தாம் தயங்கியதாகவும், தற்போது வவுனியாவில் சிங்கள மக்களுடன் வாழும் நிலையில் இந்த
 கதையை சொல்ல தயங்கியதாகவும் குறிப்பிட்ட முன்னாள் மருத்துவ மாது, இது பெறுமதியான கதை என்பதால் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
 

0 கருத்துக்கள் :