மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த 2 மருந்தகங்கள் சுற்றிவளைப்பு

12.2.16

வெலிமட நகரில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விநியோகித்து வந்த இரு மருந்தகங்கள் இன்று வெலிமட பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
பதுளையிலுள்ள உணவு முகாமையாளர்கள் மற்றும் விசேட அதிகாரிகள் ஆகியோரின் உதவியினால் பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
வைத்திய சிபாரிசு எதுவும் இன்றி மிக நீண்ட காலமாக இந்த போதை மாத்திரையை இக்கடைகளில் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. மன நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்து மற்றும் கடும் நோவு தடுப்பு மாத்திரை என்பனவே இவ்வாறு விநியோகிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த இரு மருந்தகங்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துக்கள் :