நேதாஜி ரகசிய ஆவணங்களை வெளியிட்டார் மோடி

23.1.16

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து முன்னர் அறிவிக்கப்பட்டது போல நேதாஜி குறித்த 100 ஆவணங்களை, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி, நேதாஜி உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

நேதாஜியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி சந்தித்தார். அப்போது, "நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் சில ரகசிய ஆவணங்கள் அவரது பிறந்த தினத்தின்போது பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படும்' என்று அவர்களிடம் பிரதமர் உறுதி அளித்திருந்தார்.

அதன்படி, தில்லியில் இன்று சனிக்கிழமை நேதாஜி தொடர்பாக சில ரகசிய ஆவணங்களை பிரதமர் வெளியிட்டார்.  முன்னதாக, மேற்கு வங்க மாநில அரசிடம் நேதாஜி தொடர்பாக இருந்த 64 ரகசிய ஆவணங்களை அந்த மாநில முதல் மம்தா பானர்ஜி பொதுமக்களின் பார்வைக்காக கடந்த ஆண்டு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 

0 கருத்துக்கள் :