யேமென் சண்டையில் சவுதி , எமிரேட்ஸ் தளபதிகள் பலி

15.12.15

யேமனில் ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையின்போது கொல்லப்பட்ட வெளிநாட்டு படையினரில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த அதிகாரி ஒருவரும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


யேமன் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் போரிட்டு வரும், சவூதி தலைமையிலான கூட்டுப்படையினர் தங்கியிருந்த முகாம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.
கொல்லப்பட்டவர்களில், சூடானியப் படையினர் ஒருவரும் அடங்குவார்.


யேமன் அரசாங்கத்திற்கும் ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் சமாதானப் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

0 கருத்துக்கள் :