யாழில் பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் விற்க முயன்றவர்கள் கைது

22.12.15

யாழ்.பாடசாலை ஒன்றின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்.பொலிஸாரினால் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றய தினம் குறித்த கைது சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதாவது. இவர்களின் உடமையில் இருந்து 9கட்டு ஹெரோயின் பைகளினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் சங்கரப்பிள்ளை வீதி, ஆணைக்கோட்டை, மற்றும் இனுவில் தெற்கு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் கூறினார்.
நீண்டகாலமாக குறித்த நபர்கள் மாணவர்களை இலக்கு வைத்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் குற்றத்தடுப்பு புலணாய்வு பரிவினருக்கு இரகசிய தகவல் கிடைக்கபெற்றிருந்தது.
பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் அவதானிக்கப்பட்டு வந்த இவர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக இரகசிய தகவல் கிடைக்கபெற்றிருந்து.
குறித்த இடத்திற்கு சிவில் உடையில் சென்ற பொலிஸார், பிரதான சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததுடன், அவர் மூலம் ஏனைய மூவரையும் கைது செய்துள்ளனர்.

0 கருத்துக்கள் :