புனர்வாழ்வு பெற்ற போராளியை டெனீஸ்வரன் பார்வையிட்டார்

20.12.15

புனர்வாழ்வு பெற்ற போராளியை வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் டெனீஸ்வரனின் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். அரசியல் கைதிகளின் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற போராளிகள், யுத்தத்தில் பிள்ளைகளை இழந்த முன்னாள் போராளிகள் குடும்பங்களுக்கு படிப்படியாக வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரத்தை சேர்ந்த புனர்வாழ்வு பெற்று படுக்கையில் இருக்கும் பயனாளியான சிவராசா சாந்திராசா என்பவரை அமைச்சர் சென்று பார்வையிட்டுள்ளார். தமக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி மூலம் தனது தாயார் வருமானம் பெறுவதாகவும், இதனால் தனது குடும்பத்தையும் தனது வைத்திய செலவையும் சமாளித்து வருவதாகவும் குறித்த நபர் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறு யுத்ததினால் தமது அவயங்களை இழந்து தொடர்ந்தும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிலையில் வடக்கு, கிழக்கு பகுதியில் பலர் காணப்படுவதாகவும், அவர்களை இனம் கண்டும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துக்கள் :