பொன்சேகா பெண்ணுடன் கள்ளத் தொடர்பு

15.12.15

முன்னாள் ராணுவத்தளபதி பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக பாரிய ஊடக யுத்தமொன்றை முன்னெடுக்க அவன்ட் கார்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அவண்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கும், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும் இடையில் நெருங்கிய நட்புறவு நிலவுவதாக சரத் பொன்சேகா அண்மையில் அம்பலப்படுத்தியிருந்தார்.

இதற்கு ஆதாரமாக அவர்கள் இருவரும் தமது குடும்பத்தினருடன் 2006ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இதற்குப்பதிலடியாக சரத் பொன்சேகா ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் தொடர்பு வைத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்த அவண்ட் கார்ட் தரப்பு முடிவெடுத்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இது தொடர்பான ஊடக மாநாடு ஒன்றை நடத்தவும் அவண்ட் கார்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

0 கருத்துக்கள் :