வவுனியாவில் திருடர்களின் அட்டகாசம்

13.12.15

வவுனியா பஸ் நிலையப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போயுள்ளமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வவுனியா பஸ் நிலையப் பகுதியில் நகரசபை கட்டடத் தொகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றினை நடத்தும் நபர் தனது பல்சர் ரக மோட்டர் சைக்கிளை பஸ் நிலையப் பகுதியில் நிறுத்திவிட்டு இரவு வந்து பார்த்த போது தனது மோட்டர் சைக்கிள் காணாமல் போயிருந்ததாக முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளார். இது தொடர்பாக நாம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா, வேப்பங்குளம் பகுதியிலும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீடு ஒன்றில் புகுந்த திருடர்கள் இரண்டு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :