மீண்டும் வருவாராம் திஸ்ஸ----

22.11.15

தாம் மீண்டும் அரசியலில் ஈடுபட எதிர்பார்த்திருப்பதாக, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அஸ்கிரியவில் மஹாநாயக்கரை சந்தித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அவர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி, மகிந்தராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டார்.
இதன்போது அவருக்கு அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் அவர், பிரதமரின் பெயரில் போலியான கையெழுத்துடனான ஆவணம் ஒன்றை வெளியிட்டமைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :