கைதிகளின் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி ஏமாற்றி வருகிறார் : அரியநேந்திரன்

26.11.15

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரி தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். இதற்கான மாற்றுவழி பற்றிய “இறுதி முடிவு” விரைவாகத் தேவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
 
இந்த அரசை ஸ்தாபித்தவர்களில் தமிழ் மக்களுக்கு தலையாய பங்கு உண்டு. பங்காளியின் ஏக்கத்தை புரிந்து கொள்ளாத அரசோடு ஒட்டிவாழ்வதா? வெட்டிப்பிரிவதா? என்று எமது மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அது எடுக்க இருக்கும் முடிவு ஒரு நல்ல முடிவாகவிருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

0 கருத்துக்கள் :