நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க பிரதமர் தலைமையில் 10 பேர் குழு

20.11.15

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவும் புதிய தேர்தல் முறையை ஏற்படுத்தவும் யோசனைகள் முன்வைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, டி.எம். சுவாமிநாதன், நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, லக்ஷ்மன் கிரியெல்ல, மலிக் சமரவிக்ரம,, சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் ஆகியோர் குழுவின் உறுப்பினர்கள் எனவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :