போரில் தோற்றிருந்தால் பிரபாகரன் ஜனாதிபதியாகியிருப்பார்: டளஸ் அழகபெரும

5.10.15

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்காவிடின், ஜனாதிபதி வேலுப்பிள்ளை பிரபாகரன் ஐ.நா சபையில் உரையாற்றியிருப்பார் என முன்னாள் அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், யுத்தத்தை வென்றதன் காரணமாகவே எம்மீது போர் குற்றமும் மனித உரிமை மீறல் குற்றமும் சுமத்தப்படுகிறது. தோற்றிருந்தால், இவை எதுவும் இருக்காது. ஜனாதிபதி வேலுப்பிள்ளை பிரபாகரன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றியிருப்பார்.
1776 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வொஷிங்டன் பதவியேற்றத்தில் இருந்து கடந்த 239 வருடங்களில் அமெரிக்கா 22 பிரதான போர்களில் ஈடுபட்டுள்ளது.
239 வருடங்களில் அமெரிக்கா 22 யுத்தங்களில் ஈடுபட்டுள்ளது. அப்படியானால், 10 வருடங்களுக்கு ஒரு முறை அமெரிக்கா பாரிய யுத்தங்களை செய்துள்ளது.
இவர்களே இலங்கையின் போர் குற்றங்கள் பற்றி தேடுகின்றனர். மனித உரிமைகளை பற்றி இவர்களே தேடுகின்றனர்.
யுத்தத்தை வென்றதன் காரணமாகவே எம்மீது போர் குற்றமும் மனித உரிமை மீறல் குற்றமும் சுமத்தப்படுகிறது. யுத்தத்தில் வென்றதன் காரணமாகவே எம்மை ஜெனிவாவுக்கு கொண்டு செல்கின்றனர்.
யுத்தத்தில் தோற்றிருந்தால், இவை எதுவும் இருக்காது. ஜனாதிபதி வேலுப்பிள்ளை பிரபாகரன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றியிருப்பார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஈழம் என்ற பெயரில் 194 வது நாடு சேர்க்கப்பட்டிருக்கும். போரில் வென்றதால், எம்மீது போர் குற்றம் சுமத்தப்படுகிறது எனவும் டளஸ் அழக பெரும இதன்போது தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :