ஒரு கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

10.10.15

சியம்பவாண்டுவ பிரதேசத்தில் இருந்து அம்பாறை நகருக்கு  ஒரு கிலோகிராம் 200 கிராம் கஞ்சாவை மறைத்துக் கொண்டுவந்த ஒருவரை அம்பாறை பஸ் நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை (10) காலை கைதுசெய்த அம்பாறை விசேட போதைவஸ்து ஒழிப்பு பிரிவினர், குறித்த நபரை தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்

அம்பாறை விசேட போதைவஸ்து ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து இன்று அதிகாலை 6.00 மணியளவில் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இருந்து அம்பாறைக்கு வந்த பஸ் வண்டியை சோதனையிட்டபோது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசேட போதைவஸ்து ஓழிப்பு பிரிவினரால் குறித்த நபரை சோதனையிட்டபோது, கஞ்சா வியாபாரி சாரம் உடுத்து காலில் கஞ்சாவை கட்டி மறைத்து எடுத்துவந்தமை தெரியவந்துள்ளது.

இவர் சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவரை நீதவான் முனிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை நகர பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :