மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடுக்க அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உத்தரவு

1.10.15

தேர்தல் காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளை பயன்படுத்தி, அதற்கான கட்டணம் செலுத்தாத மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர்கள்  மீது வழக்குத் தொடுக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமால்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பல்வேறு அரசியல்வாதிகள் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளை வாடகைக்குப் பயன்படுத்திவிட்டு, அதற்கான கட்டணத்தை இதுவரை செலுத்தவில்லை.
அத்துடன் குறித்த பேருந்துகளை பயன்படுத்தியமை தொடர்பில் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பிலும் சிக்கலான நிலை எழுந்துள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு தேர்தல் பிரசாரத்துக்காக யார் பேருந்துகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்களோ, அவர்கள் அனைவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்து நிலுவைத் தொகையை அறவிட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :