ஜெனீவா பயணமானது கூட்டமைப்பு

13.9.15

ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் மற்றும் சட்டத்தரணிகள் அடங்கிய குழுவினர் நேற்று அதிகாலை ஜெனிவா பயணமாகியுள்ளனர்.

ஜெனீவா சென்றுள்ள கூட்டமைப்பின் குழுவினர் அங்கு ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர் .

இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணை அறிக்கை எதிர்வரும் 16ஆம் திகதி ஜெனீவாவில் வைத்து உததியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ள நிலையில் அதில் உள்ளபரிந்துரைகளை சர்வதேச மத்தியஸ்தத்துடன் நிறைவேற்ற வேண்டும் என கூட்டமைப்பின் குழுவினர் ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :