கோத்தபாயவுக்கு தொடரும் சோகம்

17.9.15

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம், இன்று  மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கோத்தபாய இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கையில், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை சீருடைகளை மாற்றி ஈடுபடுத்தியமை தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரக்ன லங்கா பாதுகாப்பு ஊழியர்களை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பாகவும், இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இச்சம்பவம் குறித்து கோத்தபாயவிடம் ஏற்கனவே பல தடவைகள் விசாரணை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :