ரவிராஜின் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி படை அதிகாரிக்குரியது

13.9.15

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜை படுகொலை செய்வதற்குப் பயன்படுத்திய துப்பாக்கியை உயர் இராணுவ அதிகாரியயாருவர், கொலையாளிக்கு வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரவிராஜ் கொலை குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர் எனக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 இராணுவத்தின் ஆயுதமொன்று தற்காலிக அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடராஜா ரவிராஜ், நாரஹேன்பிட்டியில் வைத்து இனம்தெரியாத துப்பாக்கிதாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு  இலக்காகிச் சாவடைந்தார்.

படுகொலை செய்ய பயன்படுத்தப் பட்ட  ரி-56 ரக ஆயுதத்தை உயர் இராணுவ  அதிகாரியயாருவர் வாடகை அடிப்படையில் வழங்கியதாகக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

 லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமற்போன சம்பவம்  தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ உயர் அதிகாரிகளிடம் நடத்தப்பட்டுவரும்  விசாரணைகளில் பல்வேறு அரசியல் படுகொலைகள் பற்றிய தகவல் கள் அம்பலமாகி  வருவதாகத் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :