ஆபாச வீடியோ எடுத்து கணவர் மிரட்டல்: புதுப்பெண் பரபரப்பு புகார்

9.8.15

கணவர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவதாக புதுப்பெண் போலீசில் புகார் தெரிவித்தார். நாகர்கோவில் கோட்டாறை சேர்ந்தவர்  நிவேதாகுமாரி (20). இவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:
எனக்கும், மடிச்சல் பகுதிைய சேர்ந்த சஜூ(29) என்பவருக்கும், கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 25 பவுன் நகை, ரூ.75  ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்களை சீர்வரிசையாக கொடுத்தோம்.

ஆனால் திருமணம் முடிந்த 2வது நாளில் இருந்து எனது கணவர் குடும்பத்தினர் கூடுதலாக வரதட்சணை கேட்டுக் என்னை கொடுமைப்படுத்த  தொடங்கினர். கூடுதலாக ரூ.1 லட்சமும், வாஷிங் மிஷினும் வாங்கி வரும்படி கூறினர். மேலும் என்னை ஆபாச வீடியோ எடுத்தும் மிரட்டினர்.  எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறி உள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, விசாரணை நடத்தி சஜூ மற்றும் அவரது பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு  செய்துள்ளார். திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் ஆபாச வீடியோ எடுத்து கணவர் மிரட்டியதாக புகார் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

0 கருத்துக்கள் :