வெள்ளை வேன் விவகாரம் : மேர்வினுக்கு நீதிமன்றம் உத்தரவு

25.8.15

வெள்ளை வேன் கடத்தல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கின்  ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு மக்கள் தொடர்பாடல் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு  நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தெரியவருவதாவது,

இரகசியப் பொலிஸாரிடம் சில கடத்தல்கள் தொடர்பில் தமக்குத் தெரியும் என மேர்வின் சில்வா வாக்குமூலம் வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறும் கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இன்று நீதிமன்றத்தில் மேர்வின் சில்வா ஆஜராகி இருக்க வேண்டும் எனினும் அவர் அவ்வாறு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :