மகிந்த கொடுத்த பணமே விடுதலைப்புலிகளை பலமடையச் செய்தது

12.8.15

2005 ஆம் ஆண்டு மஹிந்த கொடுத்த பணத்தினாலேயே விடுதலைப் புலிகள் பலமடைந்ததாகவும், 2005 ஆம் ஆண்டில் அவர்களை ஒழித்திருந்தால் பாதிப்பு குறைவாக இருந்திருக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நேற்று  தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ இரண்டு முறை விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாவும்> முதலில் 200 மில்லியன்களையும் பின்னர் பிறிதொரு நிறுவனத்தின் ஊடாக 2000 மில்லியன்களையும்  வழங்கியதாக ரணில் விக்ரமசிங்க தெரவித்தார்.

2005 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்காமல் விடுவது மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தின் எவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்றே புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், 2006ம் ஆண்டு கோட்டாபய மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் குறித்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

2005ம் ஆண்டு விடுதலைப் புலிகள் பலவீனமடைந்திருந்ததாகவும்இ அதன் தலைவர்கள் பிளவுபட்டிருந்ததாகவும் அப்போது புலிகளை அழித்திருந்தால் இரண்டு பக்கமும் பாதிப்பு குறைவாக இருந்திருக்கும் எனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


எனினும் இந்தக் காலத்தில் மகிந்த ராஜபக்சவின் பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுதலைப் புலிகள் தம்மை பலப்படுத்திக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதும் விடுதலைப் புலிகளிடம் இருந்த தங்கம், கப்பல் போன்றன கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டது கே.பி மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டார்.

கே.பி தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் மறுபுறம் இந்திய அரசும் அவரைக் கோரி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :