நீரில் மூழ்கி சிறுவன் பலி

9.8.15

நாவுல, போவதென்ன பகுதியில் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் இன்று மதியம் தனது பெற்றோருடன் குளத்தில் குளிக்கச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 10 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :