சுதுவை தேடுகிறது சி.ஐ.டி

12.8.15

புளூமெண்டல் பிரதேசத்தில் கடந்த ஜூலை 31 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பாதாள உலகத்தை சேர்ந்த சுது என அறியப்படும் சமீர ரசங்க குணசேகரவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

இருவரின் உயிரை பறித்து மேலும் 11 பேருக்கு காயத்தினை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட குழு முன்னெடுத்துள்ள விசாரணைகளில் சுது என அறியப்படும் குறித்த நபர் தொடர்பு பட்டுள்ளமை இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையிலேயே அவரை கைதுச் எய்யும் நடவ்டிக்கையினை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

0 கருத்துக்கள் :