பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

1.8.15

உத்தரபிரதேச மாநிலம் கான்னூஜ் மாவட்டத்தில் உள்ள பாகின்பூரா பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திர சதுர்வேதி. மூத்த பத்திரிகையாளர்.  இவரது மகன் ராஜா சதுர்வேதி இவரும் அங்கு  பத்திரிகையாளர் மற்றும் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். அவர் சுமரிதி மற்றும் யுனைடெட் இந்தியா என்ற பத்திரிகைகளில்  தொடர்புடையவராக இருந்து வந்தார்.நேற்று பிற்பகல் ராஜா சதுர்வேதி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், ராஜா மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜா சதுர்வேதியின் உறவினர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த  ராஜாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாகடர்கள் அவர்  உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உத்தரபிரதேசத்தில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில மாதங்கலூக்கு முன் ஷாஜகான்பூரைச் சேர்ந்த பத்தரிகையாளர் ஜகேந்திரசிங் என்பவர்  உயிருடன் எரித்து கொலை செய்ய்பட்டார்.இது தொடரபாக அந்த மாநில சிறுபான்மையினர் நலத்துறை துறை அமைச்சர் ராம் மூர்த்தி சிங் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :