ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க கட்டிகளுடன் நபர் ஒருவர் கைது

1.8.15

ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 5.55 மணியளவில் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் இருந்து வந்த கண்டி, அக்குறனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 24 தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :