50 அடி பள்ளத்தில் பாய்ந்து வான் விபத்து: மூவர் படுகாயம்

24.8.15

தலவாக்கலை ட்ரூப் தோட்டத்திலிருந்து தலவாக்கலை நகரை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற வான் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று மாலை 06.30 மணியளவில் ட்ரூப் தோட்ட பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் வானில் பயணித்த சிறு குழந்தை உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மூவரும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வான் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :