மலசலக்குழிக்குள் விழுந்து 5வயது பிள்ளை மரணம்

9.8.15

பாதுகாப்பற்ற மலசலக்குழிக்குள் விழுந்து 5 வயது பிள்ளையொன்று மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா ஓலிபென்ட் தோட்டத்தைச்சேர்ந்த 5 வயது பிள்ளையே இவ்வாறு மரணமடைந்துள்ளது. இந்த பிள்ளையின் தந்தை அந்தப்பிள்ளையை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தாய், கொழும்புக்கு வீட்டு வேலைக்குசென்று விட்டதாகவும் தெரியவருகின்றது. அந்த பிள்ளை தன்னுடைய உறவினர்கள் வீட்டிலேயே தங்கியிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

0 கருத்துக்கள் :