அனைத்தையும் இழந்துவிட்டேன்: மஹிந்த….

25.7.15

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் மணி யானையின் வாலில் தொங்க விடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகலை மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளர் எராஜ் ரவீந்திர பிரணாந்துவின் தேர்தல் பிரசார காரியாலயத்தை திறந்து வைத்து (23) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது, கொழும்பில் வசிக்கும் துரைமார் இன்று எனக்கு சேறு பூசுவது நான் பின்தங்கிய கிராமத்தில் பிறந்தவன் என்பதினாலாகும்.
கொழும்பில் பிறந்திருந்தால் எனக்கும் இவ்வாறு சேறு பூசியிருக்க மாட்டார்கள். இவர்கள் இன்று யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்தமைக்குள்ள குரோதத்தினால் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து சூழ்ச்சி செய்கிறார்கள்.

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தது மாத்திரமல்லாமல் குறுகிய காலத்தினுள் பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுத்து நாட்டின் சகல பிரதேசங்களையும் கிராம நகர வேறுபாடின்றி அபிவிருத்தி செய்தோம். 88, 89 காலப் பகுதியில் இந்த நாட்டில் ஜே. வி. பி. அரசாங்கம் ஆகியவற்றின் அச்சுறுத்தல் இருந்தது உங்களது நினைவில் இருக்கும்.

வீதியோரங்களிலெல்லாம் இளைஞர்களை கொளுத்தினார்கள்.
நாம் நாட்டில் புரட்சியை ஏற்படுத்தினோம்.
ஹம்பாந்தோட்டை மாவட்டம் இலங்கையிலேயே பின்தங்கிய மாவட்டமாக திகழ்ந்தது. இதனை முன்னணி அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக கட்டியெழுப்பி னோம்.
பிரதேச இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கினோம்.

இன்னும் தொழில்களை வழங்க திட்டங்களை முன்னெடுக்கவிருந்த சந்தர்ப்பத்தில் கொஞ்சம் அவசரப்பட்டு முன்னே சென்றதனால் இவை அனைத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியினர் ஹம்பாந்தோட்டை மக்களை யாசகராக்க திட்டமிடுகிறார்கள்.

58000 கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நான் ஆட்சிக்கு வந்து ஒரு வார காலத்தினுள் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :