புலிகளின் வாகனம் என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை

23.7.15

ஆயு­தங்­க­ளுடன் வெள்ளை வேன் ஒன்றில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்­யப்­பட்டு பின்னர் நீதி­மன்ற உத்­த­ரவில் பிணையில் விடு­விக்­கப்­பட்ட மூன்று இரா­ணுவ வீரர்­களும் இரா­ணுவ பொலிஸ் தடுப்பில் வைக்­கப் ­பட்­டுள்­ள­தாக இரா­ணுவ பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜயனாத் ஜய­வீர தெரி­வித்தார்.

கொழும்பு பாது­காப்பு  அமைச்சின் ஊடக மத்­திய நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மகா­நாட்­டி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரி­வித்­தா­வது, நேற்று முன்தின் இரவு மிரிஹான பொலி­ஸாரால் ஆய­தங்­க­ளுடன் கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ வீரர்கள் நுகே­கொடை நீதவான் நீதி­மன்றில் ஆஜர்ப்­ப­டுத்­தப்­பட்டு பின்னர் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

இவர்கள் தற்­போது இரா­ணுவ பொலி­ஸாரின்  தடுப்பில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். 

இந்த ஆயு­தங்கள் எந்­த­வித சட்­ட­வி­ரோத செயல்­க­ளுக்கோ தனி­நபர் மிரட்­ட­லுக்கோ பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை எனவும் தெரி­வித்தார்.

இந்தச் சம்­ப­வத்தில் கைப்­பற்­றப்­பட்ட வாகனம் யு.ஹ 59469 என்ற இரா­ணுவ இலக்­கத்தை உடைய வாகனம் எனவும் கைத்­துப்­பா­கியை மேஜர் ஜெனரல் பிர­சன்ன சில்வா 15 வரு­ட­மாக வைத்­தி­ருந்­த­தா­கவும் அதனை இவரின் அனும­தி­யு­ட­னேயே இரா­ணுவ வீரர் பயன்­ப­டுத்தி வந்­துள்­ள­தாக தெரிய வந்துள்­ளது.

குறித்த இரா­ணுவ வீரர்கள் சட்ட பூர்­வ­மாக ஆயு­தங்­களை பயன்­ப­டுத்த அனுமதி­யு­டை­ய­வர்கள்.

இவ்­வா­றான  சட்ட நட­வ­டிக்­கைக்கு புறம்­பான செயல்­க­ளுக்கு பதவி பேதமின்றி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் ஏற்­க­னவே வெலி­கம வேன் விபத்து மற்றும் ஹொரன சம்­பவம் ஆகி­ய­வற்­றுடன் தொடர்­பு­டைய இராணுவ அதி­கா­ரி­க­ளுக்கு பார­பட்­ச­மின்றி தண்­டனை வழங்­கி­ய­மையும் பணி நீக்கம் செய்­த­மையும் குறிப்­பி­ட­தக்­கது.

இந்தச் சம்­ப­வத்­திலும் இது கடைப்­பி­டிக்­கப்­படும்.

மேலும் மிரி­ஹான பொலி­ஸா­ருக்கு இரா­ணு­வத்­தி­ன­ரி­ட­மி­ருந்து பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கப்­ப­டு­கின்­றது.

இந்தச் சம்­ப­வத்­தை­ய­டுத்து இரா­ணுவ வாக­னங்கள் சிவில் வாகன தகடுகளைத் பயன்­ப­டுத்தக் கூடாது எனவும் இரா­ணுவ இலக்கத் தக­டு­களை பயன்­ப­டுத்தல் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக இரா­ணுவ தள­பதி உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

குறித்த வாகனம் விடு­தலை புலி­க­ளு­டைய வாகனம் என சிலர் தெரி­வித்து வரு­கின்­றனர்.

ஆனாலும் இது தொடர்பில் தக்க சான்­றுகள் இது­வ­ரையில்  கிடைக்­க­வில்லை.

இதன் உண்மை தன்மை பற்றி ஆரா­யப்­பட்டு வரு­வ­தா­கவும் விரைவில் அறிக்கை சமர்­பிக்­கப்­ப­டு­மெ­னவும் ஊடக பேச்­சாளர் தெரி­வித்தார்.

இந்த சம்பவத்திற்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விரைவில் இது  தொடர்பில் அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :