தமிழ் தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சிக்குத் தடை

20.7.15

இலங்கையின் தமிழ் தொலைக்காட்சியொன்றில் கடந்த சில வருடங்களாக ஞாயிறு மாலை ஒளிபரப்பப்பட்டு வந்த அரசியல் நிகழ்ச்சியை  தேர்தல் காலத்தில் நடத்தக்கூடாதென தேர்தல்கள்  ஆணையாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தேர்தல் செலயத்தின் உத்தியோகபூர்வ   தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் சமூகவலைத்தளங்களில் வெளியான இந்நிகழ்ச்சி  தொடர்பான காணொளியொன்றில் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமானவர் பக்கச்சார்பாகவும் கட்சி  சார்பாகவும்  செயற்பட்ட விதம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
நேற்று திங்கட்கிழமை  தேர்தல் செயலகத்தில் கட்சி செயலாளர்களைத் தேர்தல் ஆணையாளர் சந்தித்து பேசிய போது இந்நிகழ்ச்சி தொடர்பான முறைப்பாடுகளை அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சிலர் முன்வைத்துள்ளனர்.

இம்முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையாளர் உடனடியாக அந்த அரசியல் நிகழ்ச்சியை நிறுத்துமாறு  உத்தரவிட்டுள்ளார். குறித்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் குழு தாம் நிகழ்ச்சியை நடத்துவதற்காக அனுமதி கோரியபோது, பதிவு செய்த நிகழ்ச்சியைத் தேர்தல் அதிகாரிகள்  குழுவிடம் காண்பித்து அவர்களின் அனுமதியை  பெற்றே ஒளிபரப்ப வேண்டுமென  ஆணையாளர் தெரிவித்திருப்பதாகவும்  தேர்தல் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துக்கள் :