என்னை ஏமாற்றி விட்டனர்; கருணா

15.7.15

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர்  விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா ) விசனம் தெரிவித்துள்ளார்.
தேசியப்பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பதாக சுசில் மற்றும் அனுர பிரியதர்சன யாப்பாவும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தனர்.

 ஆனால் கடைசியில் எனது பெயர் தேசியப்பட்டியலில் வெளியிடப்படாதது வருந்தத்தக்கது.
போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, கோத்தாபயவும், லக்ஸ்மன் ஹுலுகல்லவும், வந்து அரசாங்கத்துக்கு உதவ வேண்டும் என்று உனது உதவியைக் கோரினர்.

அந்த நேரத்தில் நாட்டுக்காக நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். அதன் காரணமாக, தமிழர்களின் சில பகுதியினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது. என்று குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :