வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

19.7.15

வவுனியா, ஸ்ரீராமபுரம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று வவுனியா பொலிசாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த ஆற்றங்கரை பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக சென்ற இளைஞர்கள் சிலர் ஆற்றங்கரைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் வழங்கினர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

 இவ்வாறு சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இராணுவத்தால் யுத்த காலத்தின் போது வழங்கப்பட்ட அடையாள அட்டை, உட்பட சில ஆவணங்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

0 கருத்துக்கள் :