இலங்கைத் தமிழர்கள் 4 பேர் விடுதலை

19.7.15

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கை தமிழர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது.

 இங்கு தங்க வைக்கப்பட்டிருந்த  இலங்கைத் தமிழர்கள் 19 பேர் தங்களை விடுவிக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இவர்களில் 4 பேரை விடுதலை செய்து தமிழக அரசு கடந்த 11ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஈழ நேரு, மதுரை மாவட்டம் திருவாதவூர் முகாமைச் சேர்ந்த உமாரமணன், ஈரோடு மாவட்டம், பவானி சாகர் முகாமைச் சேர்ந்த ரமேஷ், சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த ஜெகன் என்கிற ஸ்ரீ ஜெயன் ஆகிய 4 பேர திருச்சி சிறப்பு முகாமிலிருந்து  சனிக்கிழமை( 18) மாலை விடுவிக்கப்பட்டனர்.

0 கருத்துக்கள் :