ஒரே பெண்ணை மனைவி என்று சொந்தம் கொண்டாடும் 2 இளைஞர்கள்

25.7.15

ராஜஸ்தான் மாநிலம்  நீமுஜ் மாவட்டம் அலொரி கார்வாட கிராமத்தை சேர்ந்தவர் மைனாகுமாரி. இவருகும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஹீராலால் பாம்பி என்பவரது மகன் கோபாலுக்கும் திருமணம்  நடைபெற்றது. இந்த திருமணம் குறித்து அந்த கிராமத்தில் உள்ள அனைருக்கும் தெரியும்.

இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த முன்னாலால் பாய் என்பவர்  மைனாகுமாரியை தனது  மனைவி என்று கூறி ரதனாகாரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

 நாங்கள் இருவரும் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டோம். மீனாகுமாரிக்கும் நான் மட்டுமே கணவனாக இருக்கமுடியும் என முன்னாலால் புகாரில் தெரிவித்து இருந்தார்.புகார் கொடுத்த குடும்பம் அந்த திருமணத்திற்கு தாங்கள் அதிக அளவு செலவு செய்து உள்ளதாக கூறி உள்ளனர். இதை கேட்ட போலீசாருக்கு தலை சுற்றியது
 3 பேரையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

புதன்கிழமை கோபால் தனது தரப்பு கதையை போலீசில் கூறி உள்ளார். சட்ட பூர்வமாக மீனாகுமாரி தனது மனைவி எனகூறி உள்ளார்.

விசாரணையில் மீனாகுமாரி கோபாலை தனது கணவராக ஏற்று கொண்டார். நாங்கள் இருவரும் திருமணமாகி மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திவருவதாக கூறினார்.

என்ன செய்வது என்று தெரியாத போலீசார் இந்த பிரச்சினையை தீர்க்க சமூகத்தின் மூத்த தலைவர்களின் உதவியை நாடி உள்ளனர்.

0 கருத்துக்கள் :