யாழில் அப்பாவைக் கொல்வேன் மகளிடம் வன்புணர்வு

26.6.15

தந்தையைக் கொலை செய்வேன் எனக்கூறி சேர்ந்த 20 வயதுடைய யுவதியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவமொன்று யாழ். பருத்தித்துறை, குடத்தனை மேற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இன்று வியாழக்கிழமை (25) முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சந்தேகநபர் தலைமறைவாகி உள்ளதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

யுவதியின் அத்தானுடைய நண்பரான சந்தேநபர், மேற்படி யுவதியை அச்சுறுத்தி நள்ளிரவு வேளையில் வன்புணர்வு கொண்டுள்ளார். உடலில் மாற்றங்கள் தென்பட்டதையடுத்து.

வைத்தியசாலைக்கு யுவதி சிகிச்சைபெறச் சென்ற சமயம் இது தொடர்பில் வீட்டுக்காரர்கள் அறிந்து கொண்டு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :