வைகோவுக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளது : சீமான்

20.6.15

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ’’தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலையொட்டி தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையை அந்த துறை சார்ந்த அமைச்சர் தலையிட்டு சுமூக நிலைக்கு கொண்டு வர வேண்டும்’’என்றார்.


அவர் மேலும்,  ‘’மதுவை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம். ஆனால் வைகோ மது விற்பனையை தொடங்கிய தி.மு.க.விடம் தற்போது கூட்டணி சேரும் நிலை உள்ளது.

அவருக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளதால் அவருடன் கூட்டு சேர வாய்ப்பு இல்லை. அதனால் வரும் சட்ட மன்ற தேர்தலை தனியாக சந்திப்போம்’’என்று கூறினார்.

0 கருத்துக்கள் :