பாடசாலை மாணவன் மீது கத்திக்குத்து; பொலிஸ் விசாரணை

18.6.15

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவனை தரம் 10 மாணவன் ஒருவர் கத்தியால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் வியாழக்கிழமை (18), பாடசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

 புதன்கிழமை (17) பாடசாலை இடைவேளை நேரத்தின் போது இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை சமூகம் விசாரணைகளை மேற்கொண்டு இவ்விடயத்தை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை (18) பாடசாலைக்குச் சென்ற தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன், பெற்றோர்களும் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.

 வெட்டுக்குப் பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் பெற்றுக்கொண்டார். வெட்டுக் காயத்துக்குள்ளாகிய மாணவனுக்கு முகத்தில் 4 தையல்கள் போடப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :