இயல்பு வாழ்வை குழப்புவதற்கு விசமிகள் திட்டமிட்டு செயற்படுகின்றனர்! – தேவானந்தா குற்றச்சாட்டு

5.6.15

யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையிலும் இன்றுள்ள சூழலை குழப்பும் வகையில் விசமிகள் சிலர் திட்டமிட்டு செயற்படுவதற்கு ஒரு போதும் அனுமதியளிக்கப் போவதில்லையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் கொடிய யுத்தத்தினால் பாரிய அவலங்களை சந்தித்திருந்தனர்.
இதனால் மக்களது வாழ்வாதாரம், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறுபட்ட வசதி வாய்ப்புகளில் பெரும் பின்னடைவுகளை சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு தள்ளப்பட்டிருந்தனர்.

ஆனால்இ இன்று யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் ஏற்பட்டுள்ள தற்போதைய அமைதிச் சூழலில் மக்கள் ஒரளவேனும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் இயல்பு வாழ்விற்கு இன்னும் எமது மக்கள் திரும்பவில்லையென சில விசமிகள் திட்டமிட்ட வகையிலும் உள்நோக்கத்துடனும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போதைய உண்மை நிலவரங்களை மக்கள் நன்கறியத் தொடங்கியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துக்கள் :