விரைவில் அரசியல் மாற்றங்களையும் நன்மைகளையும் பெறுவீர்கள்: கூட்டமைப்பிடம் ஜோன் கெரி

3.5.15

விரைவில் பலவிதமான அரசியல் மாற்றங்களையும் அரசியல் நன்மைகளையும் நாங்கள் பெற்றுகொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தம்மிடம் தெரிவித்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரை இன்று கொழும்பில் சந்தித்தார்.

  இச் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்,
அமெரிக்க இராஜங்க செயலாளரை சந்திக்க எமக்கு 25 நிடங்களே வழங்கப்பட்டிருந்தன. ஆனால் எமது பிரச்சினைகளை எடுத்துரைக்க குறித்த நேர காலம் போதுமானதாக அமையவில்லை. ஆனால் எமக்குள்ள பல பிரச்சினைகளை ஜோன் கெரி ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார்.
மேலும் எமது பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் எடுத்துரைத்தார்.

இதற்கு பதிலளித்த ஜோன் கெரி, தற்போதைய சூல்நிலை நல்ல முறையில் மாறிகொண்டு வரும் போது அதனை நீங்கள் சாதகமாக பயன்படுத்திகொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
நீங்கள் பல விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் சூல்நிலைகளுக்கு ஏற்ப தீர்த்துகொள்ள வேண்டும்.

மேலும் விரைவில் பலவிதமான அரசியல் ரீதியான மாற்றங்களையும் நன்மைகளையும் நாங்கள் பெற்ற கொள்வோம் எனவும் கூறினார்.

0 கருத்துக்கள் :