பெண் குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்த தாய்

3.5.15

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் பெண் குழந்தை பிறந்ததால் பெற்ற குழந்தை என்றும் பார்க்காமல் பிறந்த பெண் குழந்தையை உயிருடன் குழி தோண்டி புதைத்துள்ளார் அந்த பெண் குழந்தையின் தாய்.


சம்பவத்தன்று அமிர்தசரஸ் நகரை சேர்ந்த ஒருவர் வயல் பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குழந்தையின் அழுகு குரல் கேட்டது  ஓடிப்போய் பார்த்த போது ஒரு பெண் குழந்தை குழியில் புதைக்கபட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக கிராம மக்களுக்கு தெரிவித்தார் கிராம மக்கள் உதவியுடன் அந்த பெண் குழந்தையை மீட்டனர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது விரைந்து வந்த போலீசார் கிராம மக்கள் உதவியுடன் அக்குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அக்குழந்தை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அந்த பெண் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.


 பெண் குழந்தை பிறந்ததால் அதைக் கொல்லும் நோக்கத்தில் அதன் தாயார் உயிருடன் புதைத்து விட்டுச் சென்று இருக்கலாம் அல்லது அது கள்ளக்காதலில் பிறந்ததா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அக்குழந்தையின் தாயாரை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர்.


பெண் குழந்தையை உயிருடன் இருக்கும் போது அதை மண்ணில் புதைத்து விட்டு சென்று இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துக்கள் :