சோமவன்சவுடன் ஜே.வி.பி.இன் முக்கிய தலைவர்கள்: ஜே.வி.பி.க்கு மீண்டும் பாரிய பிளவு?

18.4.15

மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகிய முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுடன், அக்கட்சியின் முக்கிய தலைவர்களான ரில்வின் சில்வா, கே.டி.லால்காந்த, விமல் ரத்நாயக்க, ராமலிங்கம் சந்திரசேகர் உட்பட பலர் இணைந்து கொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 கட்சியிலிருந்து விலகிய சோமவன்ச, ஜே.வி.பி.யின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள ஆதரவாளர்களுக்கு தலைமைத்துவம் வழங்கும் வகையில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன், ரோஹண விஜேவீரவினால் ஜே.வி.பி கட்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

 இதனால் 71, 88 காலப்பகுதிகளில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கி;ல் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், அவை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். நாளடைவில் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்துக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி தேசிய கட்சிகளான, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றிற்கு சவால்விடும் வகையில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், கட்சியிலிருந்து அப்போதைய பிரசார செயலாளர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர், வெளியேறியதை தொடர்ந்து கட்சி பாரிய பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையிலான முக்கிய தலைவர்கள் வெளியேறுவார்களாயின் ஜே.வி.பி. பாரிய பின்னடைவை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :