ஆற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

17.4.15

பழனிசாமி சரோஜினி எனும் 18 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா - கெனியன் நீர்த்தேக்கத்திற்கு அருகில் லக்ஷபான ஆற்றிலிருந்து யுவதியின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த யுவதி, தனது தாயுடன் 15 ஆம் திகதி சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0 கருத்துக்கள் :